si_uni  ta_uni
SinhalaEnglish

 


முகப்பு அமுல்படுத்தல் முகவர்கள்
இணைந்த நிறுவனங்கள்

மத்திய சுற்றாடல் அதிகார சபை

 

மத்திய சுற்றாடல் அதிகார சபை

1988  மற்றும்  2000  ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்ட 1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரகாரம், 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி அதிகார சபையானது, சுற்றாடலை பாதுகாத்தல், முகாமைத்துவமும் மேம்படுத்தலும் என்பவற்றுக்கான ஏற்பாடுகளை அளித்தல், சுற்றாடலின் பண்புசார் தரத்தை  ஒழுங்குப்படுத்தல், பேணுதல், கட்டுப்படுத்தல் போன்றே மாசுப்படுத்தலை தவிர்த்தல், குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களின் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
மத்திய சுற்றாடல் அதிகார சபை
 

104, பரிசர பியச,

ரொபட் குணவர்தன மாவத்தை,

பத்தரமுல்ல

இலங்கை.
+94-11-2872278, 2872263, 2873447-9
+94-11-2872415, 2873447
www.cea.lk

 

வனப்பாதுகாப்பு திணைக்களம்

 

வனப்பாதுகாப்பு திணைக்களம்

 

வனப்பாதுகாப்பு திணைக்களம் 1887 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வனக்கட்டளைச்சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், காடழிப்பு சதவீதத்தை  குறைப்பதற்காக வினைத்திறனுடன் கூடிய பல முயற்சிகளை இத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இத் திணைக்களத்தினால் மேற்கொள்கின்ற கடமைப்பொறுப்புகள் 07 தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன், அவை, வனவியல், வனப் புள்ளிவிபரவியல் மற்றும் முகாமைத்துவம், சுற்றாடல் முகாமைத்துவம், வன ஆராய்ச்சி மற்றும் கல்வி, சமூக வனவியல் மற்றும் வனவிஸ்தரிப்பு ,  திட்டமிடல், முன்னேற்ற நிர்வாகம் மற்றும் வனப்பாதுகாப்பு,  சட்டவாக்கப் பிரிவு என்பனவாகும்.

மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
வனப்பாதுகாப்பு திணைக்களம்
 

இலக்கம்  82

சம்பத்பாய

ரஜமல்வத்தை வீதி,

பத்தரமுல்ல

இலங்கை.

+94-11-2866631-2
+94-11-2866633
www.forestdept.gov.lk

 

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம்

 

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம்

புவிச்சரிதவியல் மற்றும் அளவைப் பணியகம் 1993 ஆம் ஆண்டு ஸ்தபிக்கப்பட்டது. இந் நிறுவனம் நாட்டின் கனிய வளங்களின் பாதுகாப்பு, ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்காக பங்களிப்பை வழங்குகின்றது. நாட்டின் முன்னேற்றத்திற்காக கனிய வளங்களை உரிய வாறு வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் சுற்றாடலுக்கு நன்மைபயக்கும் வகையில் பாதுகாப்பான முறையல் கனிய வளங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக ஆராய்தல் இப் பணியகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இப் பணியகத்தின் பிரதான பொறுப்பு யாதெனில், முறையாக புவியியல் நிலப்படத்துறை மற்றும் நாட்டின் கனிய வளங்களை மதிப்பிடுதல் என்பனவாகும்.

 
 
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
புவிச்சரிதவியல் மற்றும் அளவைப்பணியகம்
 

இலக்கம். 04, சேனாநாயக்க கட்டிடம்

காலி வீதி, தெகிவளை, இலங்கை.
+94-11-2725746, 2725751, 2739307-8
+94-11-2735752
www.gsmb.gov.lk

 

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபை

 

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபை

கடல் மாசுப்படுவதனை தவிர்க்கும் அதிகார சபையினால், கடல் மாசடைதலை தவிர்த்தல்,  ஏனைய விடயங்கள் தொடர்பாகவுள்ள சர்வதேச நியமங்களை நடைமுறைப்படுத்தல்  அத்துடன் சட்டரீதியான ஒழுங்குவிதிகளின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ள தேசிய, சர்வதேச பிணைப்புகளுக்கு ஏற்புடையதாகும் வண்ணம் கப்பல் சார்ந்த மற்றும் கரையோரங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலிருந்து கடற் சுற்றாடல் முறைமையை பாதுகாக்கப்படுகிறது.   

 
 
மேலதிக விபரங்களுக்காக  அழைக்கவும்
மத்திய சுற்றாடல் அதிகார சபை 
 

104, பரிசர பியச,

ரொபட் குணவர்தன மாவத்தை,

பத்தரமுல்ல

இலங்கை.
+94-112687520, 2690604-5
+94-11-2687451
www.mppa.gov.lk