-
- Registration for obtaining Quota to import Hydrochlorofluorocarbon (HCFC) in 2021
- Proposed National Policy on Chemicals Management
- National Green Reporting System (NGRS) of Sri Lanka 2020
- PROJECTS
- NGRS Application
- International Biodiversity Day 2020
- World Earth Day 2020
- Climate Mitigation Action Support Project (CMAS) Procurement Notices
- Methodology for being eligible to import HCFC under quota mechanism
- World Day to Combat Desertification and Drought
- National Policy and Strategies on Traditional Knowledge and Practices related to Biodiversity
-
-
- National Flower of Sri Lanka
- Right to Information Act - Contact details
- Clean Air 2025
- Environment and Social Management Framework-ESMF of GCF funded project on Strengthening Climate Resilience of Subsistence Farmers and Agricultural Plantation Communities residing in the vulnerable river-basins, watershed areas and downstream of the Knuckles Mountain Range Catchment of Sri Lanka
- National Policy on Access to Biological Material and Fair and Equitable Benefit Sharing
- Public Comments - National Policy on Conservation and Sustainable Utilization of Mangrove Ecosystems in Sri Lanka
- e- news paper - Paleo Biodiversirty
- ENVIRONMENTAL AND SOCIAL MANAGEMENT FRAMEWORK FOR THE SRI LANKA INTEGRATED WATER RESOURCES AND WATERSHED MANAGEMENT PROJECT
- Integrated Watershed & Water Resources Management Project - Resettlement Policy Framework
- Environmental and Social Screening Report & Environment and Social Management Plan Mahalindawewa Irrigation Scheme
- ESSR and ESMP for Walawa of Integrated Watershed and Water Resources Management Project
- Special notice to importers, purchasers, owners and service providers of Refrigeration & Air Conditioning Equipment working on R 22 refrigerant
- National Policy on Sustainable Consumption and Production
- National Waste Management Policy
- Green building guidelines
- Sri Lanka Next
- Biosafety News Letter
- News Letter Booklet on Biosafety
- Programme for creation of awareness for the Governemtn Teachers on Environment Education Introduce under the New Syllabus
- Lunch Sheets, Shopping bags, Grocery bags and E.P Lunch boxes are prohibited
- Naagarika Thuru Viyan
- Wana Ropa
- Open Government Data Set
Frequently Asked Questions (FAQs) |
There are no translations available.
கே1. இலங்கையில் CDM கருத்திட்டத்தை நாம் எவ்வாறு விருத்தி செய்யலாம் ?
ப1. வழிமுறை அட்டவணையிலிருந்து CDM கருத்திட்ட அபிவிருத்தி செயன்முறையை நீங்கள் கண்டுகொள்ள முடியும். இலங்கையில் CDM வழிமுறையை அட்டவணையை தயவு செய்துபதிவிறக்கம் செய்யுங்கள்.
கே2. எமது CDM கருத்திட்ட அபிவிருத்தி அட்டவணைக்கு யாராவது ஆதரவளிக்கிறார்களா ?
ப2. சுற்றாடல் அமைச்சின் காலநிலைப்பிரிவின் கீழான குறித்தொதுக்கப்பட்ட அதிகாரசபையிலிருந்தான பணியாட்டொகுதியினரின் ஒரு உறுப்பினர் ஓரளவிற்கு ஆதரவளிப்பதில் சந்தோசமடைகின்றனர் (PIN செயன்முறைத்தொடர், தகுதிபெறுதல் தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவது).
Q3. Are there any CDM consultant available in Sri Lanka ?
ப3. ஆம் உங்களுடைய உசாத்துணைக்காக உள்ளுர் அங்கீகரிக்கப்பட்ட CDM களின் பெயர்கள் தொடர்புகளின் நிரலை உங்களுக்கு நாம் வழங்கமுடியும்.
கே4. CDM அபிவிருத்தி செய்வதற்கான செலவினம் எவ்வளவு ?
ப4. இது ஒவ்வொன்றையும் பொறுத்து மாறுபடும். எவ்வாறாயினும் கருத்திட்ட முன்மொழிவாளரின் அநேகமான கருத்திட்ட வடிவமைப்பு ஆவணத்தின் தயார்ப்படுத்தலுக்காக CDM ஆலோசகருக்கு கொடுப்பனவு செய்யப்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் குறித்தொதுக்கப்பட்ட செயற்பாட்டு நிறுவனத்திற்கு அதனை செல்லக்கூடியதாக உறுதிப்படுத்துவதற்கான கட்டணத்தையும் மற்றும் சரிபார்த்தல் கட்டணத்தையும் தமது சொந்த தயாரிப்பு மற்றும் செயற்பாடுகளுக்கான கிரயம் மற்றும் செலவினங்களுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது..
கே5. எமது சான்றுப்படுத்தப்பட்ட வெளிவருதல்களை குறைப்பதற்கான வாங்குபவர்களை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
ப5. சந்தையில் பல வாங்குபவர்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அல்லது இலங்கை அரசாங்கமானது ஏற்கனவே இலங்கை காபன் நிதியம் (SLCF) இலங்கையில் CDM கருத்திட்டங்களை ஊக்குவிக்கும் முகமாக உருவாக்கியிருக்கின்றது. அத்துடன் அது இலங்கை கருத்திட்ட முன்மொழிவாளர்களிடையே CER ஈரடுபாடுகளையும் வசதிப்படுத்துவதுடன் சர்வதேச வாங்குபவர்களையும் அது வசதிப்படுத்தி தருகிறது.
கே6. எமது திட்டமிடப்பட்ட கருத்தி்ட்டத்திலிருந்து GHG வெளிப்படுகையின் சிறிய அளவையே நாம் எதிர்பார்த்திருந்தோம். அத்துடன் இது பொருளியல் ரீதியாக இதன் இயலக்கூடிய தன்மை குறித்தும் நாம் கவலையடைகிறோம். UNFCCC யில் CDM கருத்திட்டமாக பதிவு செய்து கொள்வதற்கு இதனை சாத்தியமாக்கிக்கொள்வதற்கு ஏதாவதுவழியுண்டா?
ப6. மேற்படி விடயத்திற்கு நீங்கள் இருவகையான முறைமையியல்களை பரிசீலிக்கக்கூடியதாக உள்ளது. ஒன்று சிறு அளவிலான CDM கருத்திட்டங்களை ஒன்றுகட்டுதலாகும். மற்றையது நிகழ்ச்சித்திட்டரீதியான CDM ஆகும்.மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு CDM இலே நிகழ்ச்சித்திட்ட CDM யும் சிறிய அளவிலான ஒன்றுகட்டும் CDM களையும் உசாவுங்கள்.
கே7. CDM கருத்திட்டத்திற்கான அங்கீகாரச் செயன்முறை என்ன ?
ப7. தயவுசெய்து பின்வரும் இணைப்பை பின்தொடருங்கள் :விருந்தோம்பி நாட்டின் அங்கீகாரச் செயன்முறை.
கே8. CDM கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏதாவது நிதியீட்டல் திட்டங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளதா ?
ப8. இலங்கையில் CDM கருத்திட்டங்களுக்கு நிதியீட்டுவதற்கென விசேடித்த திட்டங்கள் இருப்பதாக இல்லை. எவ்வாறாயினும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்துள்ள காபன் நிதியங்கள் உள்ளன. இவைகள் CDM கருத்திட்டங்களில் கருத்திட்ட ஆவணங்களை விருத்தி செய்வதற்கும் செல்லுபடியானதாகச் செய்வதற்கும் நிதியுதவிகளை வழங்குகின்றன.
கே9.இலங்கையிலே எத்தனை இலங்கைக்கேயுரிய தாவர மற்றும் விலங்கினங்கள் பதிவாகியுள்ளன?
விலங்கு இன (சிவப்பு நிரல் 2007)
தாவரவகை (சிவப்புநிரல், 2007)
கே10.புராதன பல்வேறுபட்ட உயிரினவகை என்றால் என்ன?
புராதன பல்வேறுபட்ட உயிரினவகை என்பது ஒரு புராதனகால பல்வேறுபட்ட உயிரினவகையாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் வரைக்கும் மற்றும் நிலக்கீழ் தாவர விலங்கு அழிவு எண்ணெய் படிமங்கள் காலப்பகுதிக்குமான மனிதன் மற்றும் அவன் சுற்றாடல் குறித்து ஆய்வு செய்வதுடன் சம்பந்தப்படுகிறது. மனிதன் அவனது வசிப்பிடம் விலங்குகள் தாவரங்கள், கலாச்சாரம், வாழ்க்கைமுறை என்பன பற்றிய ஆய்வாகும்.
Natural Resource Management Division
There are no translations available. Question 01 No provision is available in the circular no. 04/2010 dated 29th December 2010 issued by the Ministry of Environment and Renewable Energy to explain how trees grown in a land which has a permit older than 15 years (Lands which have not been issued with a grant so far) and issued under the provisions of Land Development Ordinance are removed. What kind of measures can be taken on the requests in this nature? Answer 01 It is the responsibility of the relevant Divisional Secretary to take a final decision whether the occupant of the land is issued with a grant or not within a reasonable time period. When a Divisional Secretary has received a request to remove trees from a land where such decision has not been taken during the last 15 years, first the divisional secretary must consider whether the applicant can be issued a grant for the particular land. In case of the application for the removal of trees is deemed to be urgent due to some exceptional reasons, the divisional secretary may forward the case to the Secretary of the Ministry of Environment giving sufficient justification. The justification should include why the application cannot be postponed until the grant is issued under the provisions of Land Development Ordinance and why such grant could not be issued during sufficient period of time. The Secretary to the Ministry of Environment and Renewable Energy consider the applications case by case together with other supporting documents and take a final decision.
கே12.வாகனங்களின் புகை வெளிவிடும் பரிசோதனை தொடர்பாக எப்போதும் வினாவும் கேள்விகள் (VET)
வாகனங்களின் புகை வெளிவிடும் பரிசோதனை தொடர்பாக எப்போதும் வினாவும் கேள்விகள் (VET)
01. வாகனங்களின் புகை வெளிவிடும் பரிசோதனை செய்து கொள்வதற்கு முடியுமான இடங்கள் எவை? இதற்காக அனுமதி பெற்றுள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவை லாப் இகோ ஸ்ரீ தனியார் கம்பனி மற்றும் க்லின்கோ தனியார் கம்பனி என்பனவாகும். இவர்களுக்கு உரியதாக வாகனங்களின் புகை வெளிவிடும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையங்கள் நாடு பூராகவும் லாப் இகோ ஸ்ரீ மற்றும் ட்ரயிவ் க்ரீன் என்ற வர்த்தகப் பெயர்களின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இவ்வாறான 320 நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றின் இணையத்தளங்களை அணுவதன் மூலம் குறித்த நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடங்களையும், அவற்றுக்கான விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் உங்களுக்கு மிகவும் அண்மித்ததும் இலகுவானதுமான இடத்தை தெரிவு செய்து உங்களது வாகனத்தை பரிசோதனை செய்துகொள்ளலாம்.
02. எனது வாகனத்தின் பொருட்டு புகை வெளிவிடும் பரிசோதனை எப்பொழுது செய்து கொள்ளுதல் வேண்டும்? உங்களது வாகன அனுமதிப்பத்திரத்தை வருடாந்தம் புதுப்பிக்கும் போது, வாகனத்தின் புகை வெளிவிடும் பரிசோதனையில் தகுதி பெற்றமைக்கான சான்றிதழ் சமர்ப்பிப்பதனை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கட்டாயப்படுத்தியுள்ளது. ஆகையால் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது அதாவது, வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கின்ற சந்தர்ப்பத்திற்கு முன்னராக இப் பரிசோதனையை செய்துகொள்ளுதல் வேண்டும். இதற்கு மேலதிகமாக வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாகனத்தின் புகைக் குழாயிலிருந்து புகை வெளியேறினால், மேற் படி பரிசோதனை செய்து கொள்ளுதல் நன்மை பயக்குவதுடன், குறித்த கோளாரினை இயந்திரம் பழுது பார்க்கும் இடத்தில் செய்து கொள்ளுதல் வேண்டும்.
03. வாகனங்களின் புகைக் கசிவு பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம் யாது? உயர் புகைக் கசிவு போக்கினை கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற வாகன பயன்பாடு காரணமாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெரும் பாலும் நகர்புற பிரதேசங்களில் அதிகளவில் வளி மாசடைந்துள்ளது. விசேடமாக மேற் படி வளி மாசடைதல் காரணமாக சுவாசத்தொகுதி மற்றும் குருதி தொகுதி சார்ந்த பெரும்பாலான சுகாதாரப் பிரச்சினைகள் அதாவது, இழுப்பு நோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படலாம். பல்வேறு செயற்பாடுகள் காரணமாக உற்பத்தியாகின்ற மாசடையும் காரணிகள் அதிகளவில் வாகனங்களில் வெளியாகின்ற புகைகளில் உள்ளன. · வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்ற புகை மிகவும் ஆபத்தான மாசடைதல் காரணியாவதுடன், அது சுவட்டு எரிபொருள் செயற்பாட்டின் போது உற்பத்தியாகி பின்னர் வாகனத்தின் வெளிப்புற குழாயின் ஊடாக வெளியேருகிறது. · வாகனங்களின் புகை வெளிவிடுதல் செயற்பாடு காரணமாக வெளியேற்றப்படுகின்ற சுகாதாரத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அடிப்படை நச்சுப் புகையில் காபன்மொனொக்சயிட், ஹயிட்ரோகாபன், நயிதரசன் ஒக்ஸயிட், சல்பர்டயொக்சயிட் ஆகியவற்றில் நுண் துணிக்கைகள் மற்றும் ஈயம் போன்ற நச்சுப் பொருட்களும் உள்ளன. · இதற்கு மேலதிகமாக, குறித்த அடிப்படை புகைக் கசிவு மற்றும் எதிர் நடவடிக்கை என்பன காரணமாக ஓசோன் போன்ற ஏனைய வாயுக்கள் மற்றும் சல்பேட், நயிட்ரேட் போன்ற சிறு துணிக்கைகள் வளிமண்டலத்தில் இரண்டாம் நிலையிலான மாசடைதல் காரணிகளாக உருவாகலாம்.
ஆகையால் தறபோது பயன்படுத்துகின்ற வாகனங்களிலிருந்து வெளிவிடப்படுகின்ற புகை கசிவுகளை பரிசோதனை செய்தல் மற்றும் வாகனங்களை உரிய வாறு பேணிச்செல்லுதல் தொடர்பாக சாரதிகளை அறிவுறுத்துவதற்காக, அரசாங்கத்தால் வாகனங்களின் புகை வெளிவிடுதல் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
04 வாகனப் புகைப் பரிசோதனைக்கு எவ்வளவு பணம் செலவகும்? விலை கணக்குகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறாகும்.
05. வாகன புகை வெளிவிடுதல் பரிசோதனையில் தகுதி பெறுவதற்கு என்ன செய்தல் வெண்டும்? வாகனத்தின் சிறந்த செயற்பாட்டிற்கும் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கின்றதுமான முறையில் எரிபொருள் பாவனைக்காக, உரிய பேணுதல் அத்தியாவசியமாகும். நீங்கள் உங்களது வாகனத்தை உரிய வாறு பேணிச்சென்று அதன் இயந்திரத்தை (எனஜின்) சரியாகவும் முறையாகவும் பழுது பார்ப்பதாயின், உங்களது வாகனம் மிக இலகுவாகவே புகைப் பரிசோதனையில் தகுதி பெறுவதற்கு காரணமாக அமையும்.
06. வாகனப் பரிசோதனையின் பின்னர் வாகனத்திற்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அறிந்துகொள்வது எவ்வாறு? வாகனத்தை பரிசோதனை நிலையத்திற்கு கொண்டுச் சென்ற பின்னர் அதனை எரிபொருள் வகைப்படுத்தலின் பிரகாரம் உரிய ஓட்டப்பாதையில் விடப்படும். ஒவ்வொரு ஓட்டுப்பதையிலும் வாகனத்தின் பார்வை மட்டத்திலான பரிசோதனை செய்யப்படும். அச்சந்தர்ப்பத்தில் கீழ் குறிப்பிடுபவைகள் அவதானிக்கப்படும்.
அடிச்சட்டக இலக்கம் சயிலன்சர் கசிவு எண்ணெய் கசிவு நீர் கசிவு வாயு வடிகாட்டி(இயன்றால்) எண்ணெய் தாங்கியன் மூடி இயந்திரத்தின் எண்ணெய் பரிசோதனை செய்யப்படும் கம்பி ப்லக்டொப் பான்பெல்ட் அசாமான்ய அதிர்ச்சி அல்லது சத்தங்கள் வேகத்தை கூட்டுவதற்காக ,யந்திரத்தில் உள்ள ஒரு வகை கருவி (accelerator) இவற்றில் ஏதேனமொன்றின் அசாமான்ய நிலை அவதானிக்கப்பட்டால் வாகனத்தை புகை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டாது. வாகனத்தை உரிய வாறு பழுதுபார்த்து, பேணிச்சென்ற பின்னர் புகை வெளிவிடும் பரிசோதனை செய்துகொள்வதற்கு கொண்டு வரும் படி எச்சரிக்கை செய்யப்படும். இப்பணிக்காக விசேட பரிசோதனை துண்டு பத்திரமொன்றை பயன்படுத்தப்படும். ஆகையால் மேற்படி பரிசோதனை காரணமாக தங்களது வாகனம் பரிசோதனை செய்கின்ற போது எதுவித விபத்துகளும் ஏற்படமாட்டது என்பதற்கு பொறுப்பு கூறப்படும். 07. வாகனப் புகை வெளியிடப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் முறைமையியல்கள் மேற் கூறப்பட்டவாறு வாகனத்தை முதலாவதாக பார்வை மட்டத்திலான பரிசோதனைக்குட்படுத்தப்படும். அதன் பின்னர் குறித்த பார்வை மட்டத்திலான பரிசோதனையில் திருப்பதிகரமாக உள்ளவிடத்து ஏற்புடைய தரவுகளை தரவு முறமையில் (VIN) உள்ளடக்கிய பின்னர் புகை வெளியிடப்படும் பரிசோதனை மேறகொள்ளப்படும்.
பார்வை மட்டத்திலான பரிசோதனையின் பின்னர் டீசல் ஓடு பாதையில் உள்ள டீசல் வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தப்படும். எண்ணெயின் வெப்பம் 55 0C என்ற பெறுமதியில் வைக்கப்படும். டீசல் வாகனங்களுக்காக புகை வெளியிடப்படும் பரிசோதனை, மூன்று முறை முன் பரிசோதனைகளும் (Snap Acceleration), அளவையிடுவதற்காக மூன்று முறையும் மேற்கொள்ளப்படும்.
பெற்றோல் வாகனங்களுக்காக காஸ் அனலயிஸர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அது உரிய வெப்ப நிலையில் வைத்து காபன்மொனொக்சயிட் (CO) மற்றும் ஹயிட்ரோகாபன் மெதுவாக (HC) செல்லுகின்ற (idle) நிலையின் கீழ் மற்றும் ஒரு நிமிடத்தில் 2500 சுற்றும் வேகத்தில் (2500 +/- 300) மேற்கொள்ளப்படும். பரிசோதனை மேற்கொள்ளப்படும் .அதேவேளை வாகனத்தின் அடிச்சட்டக இலக்கத்தை தன்னிச்சையாக புகைப்படமெடுப்பதற்காக உபகரணத்தில் கெமரா பொருத்தப்பட்டுள்ளது. பரிசோதனையில் தகுதியடைந்த மற்றும் தகுதியடையாத இரு வாகனத் தொகுதிகளுக்கும் அவற்றின் புகை வெளியேற்ற பெறுமதி களை குறிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வர்ண குறியீடுகளைக் கொண்டு அச்சிடப்பட்டுள்ள VET சான்றிதழ்கள் வழங்கப்படும். மேற்படி சான்றிதழின் பிரதி உள்ளூராட்சி நிறுவனத்திடமும் வழங்கப்படும்.
அனைத்து வாகனப் பரிசோதனைகளுக்கும் ஏற்புடைய கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். ஏதேனும் வாகனமொன்று புகைப்பரிசோதனையில் தகுதிபெற வில்லயெனில், அது தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டுப்பத்திரத்தில் உரிய கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணத்தை குறிப்பிட்டு வழங்கப்படும். அதே போன்று தகுதி பெறாத வாகனங்களின் பொருட்டு சம்பந்தப்பட்ட பரிசோதனை நிலையத்தால் மீண்டும் இலவசமாக பரிசோதனை செய்வதுடன், 60 நாள்களுக்குள் உரிய வாறு பேணிச்சென்று மீண்டும் வரும் படி ஆலோனை வழங்கப்படும்.
08. வாகனப் பரிசோதனையின் போது வாகன உரிமையாளர் பங்குகொள்ளுதல் அத்தியாவசிமாகுமா? இத் தேவைப்பாடு அத்தியாவசியமற்ற போதிலும், வாகனத்திற்கு ஏற்புடையதான ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் கட்டாயமாகும். 09. பரிசோதனையின் போது எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் எவை? வாகனப்பதிவு செய்தல் ஆவணங்களில் மூலப்பிரதிகளை கொண்டு வர வேண்டுமென்பதுடன், சம்பந்தப்பட்ட வாகனம் குத்தகை அடிப்படையில் பெற்றக்கொண்டிருப்பின் குறித்த குத்தகை கம்பனியால் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றுப்படுத்திய வாகன பதிவு அட்டவணையை எடுத்து வருதல் வேண்டும்.
10. வாகனப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இரண்டு கம்பனிகள் உள்ளன. அதில் ஒரு கம்பனிக்கு உரியதான நிலையத்தில் ஒரு முறை புகைவெளியிடப்படும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் மீண்டுமொரு முறை பரிசோதனை செய்வதற்கு குறித்த கம்பனிக்கு உரியதான நிலையத்திற்கு செல்ல வேண்டுமா? தேவையில்லை. வாகன உரிமையாளர் தமக்கு வசதியானதும் விருப்பத்திற்மைவாகவும் நிலையத்தை தெரிவு செய்யலாம். எல்லா தரவுகளும் அரசாங்க தரவு களஞ்சியத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதால் அது பிரச்சினையாக அமையாது. வாகன உரிமையாளர் தமது முன் அனுபவம் மற்றும் வசதி கருதி உரிய நிலையத்தை தெரிவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார். 11. புகை வெளியிடப்படும் பரிசோதனையின் போது வாகனமொன்று தகுதிபெற வில்லயெனில், நாம் மேற்கொண்டு என்னசெய்தல் வேண்டும்? ஏதேனும் வாகனமொன்று புகைப்பரிசோதனையின் போது தகுதி பெறவில்லையெனில் உரிய கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணங்கள் குறிப்பிடப்பட்டு துண்டுப்பத்திரம் வழங்கப்படும். அதே போன்று அவ்வாறு தகுதி பெறாத வாகனங்களின் பொருட்டு உரிய பரிசோதனை நிலையங்களால் இலவசமாக மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், 60 நாள்களுக்குள் உரிய வாறு பேணிச்சென்று மீண்டும் வரும் படி ஆலோசனை வழங்கப்படும்.
12. வாகன புகை பரிசோதனையில் தகைமைபெற வில்லயெனில் அதனை எந்த இடத்தில் பழுது பார்த்தல் வேண்டும்? அவ்வாறு பழுது பார்த்தலுக்காக பரிந்தரை செய்யப்பட்ட இடங்கள் உள்ளனவா? இல்லையெனில் எனது விருப்பத்திற்கமைவாக தெரிவு செய்து கொள்ள முடியுமா? அரசாங்கத்தால் விசேட சேவை நிலையங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. வாகன உரிமையாளர்கள் தமது விருப்பத்திற்கமைவாக இடத்தை தெரிவு செய்யலாமென்பதுடன், சிறந்த தரத்துடனும் நேர்மையானதும் சேவையை வழங்குகின்ற இடத்தை தெரிவு செய்து கொள்வதற்கு வாகன உரிமையளர்கள் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.
13. தகுதி பெறாத வாகன மொன்று மிண்டும் புகை வெளி விடும் பரிசோதனையில் தகுதி பெற்றால் எவ்வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.? வாகனமொன்று புகை பரிசோதனையில் தகுதி பெற்றால், வாகன உரிமையாளருக்கு வாகனப்புகைப் வெளியிடல் பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும். இச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட வர்ணங்களை குறியீடு செய்து, முன்னராக அச்சிடப்பட்ட சான்றிதழாகும். இச் சான்றிதழின் பிரதியை (half slip) சம்பந்தப்பட்ட VET நிலையத்தால் உள்ளூராட்சி நிறுவனத்திடம் வழங்கப்படும். வாகன அனுமதிப்பத்திரத்தை பழுது பார்க்கும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் (VET) சான்றிதழ் மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.. 14. புகை பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தின் போது பயன்படுத்தும் புகை வெளியிடல் நியமங்கள் எவை? புகை வெளிவிடப்படும் நியமங்கள் கீழே குறிப்பிடப்படும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
பெற்றோல் வாகனங்களுக்காக, அட்டவணை 2008: ஏப்பிரல் 01 ஆந திகதி தொடக்கம் நடைமுறைப்படும் வண்ணம், பெற்றோல் வாகனங்களுக்கான புகை வெளிவிடப்படும் நியமங்கள். (மத்திய சுற்றாடல் அதிகார சபை, 2003)
சுருக்கக் குறிப்புக்கள்
% v/v - தொகுதிக்கான நூற்றுவீதம் டீசல் வாகனங்களுக்காக அட்டவணை 2008: ஏப்பிரல் 01 ஆந திகதி தொடக்கம் நடைமுறைப்படும் வண்ணம் டீசல் வாகனங்களுக்கான புகை வெளிவிடப்படும் நியமங்கள். (மத்திய சுற்றாடல் அதிகார சபை, 2003)
சுருக்க விளக்கக் குறிப்புக்கள்
K – காரணி - உறிஞ்சுபவர் இணை வினைத் திறனானவர் (Instant Acceleration) . இவ் வசனத்தின் பொருள்கோடலில் அதே கருத்தைக் காட்டுகிறது. 15. VET மூலம் பரிசோதனை செய்யப்படும் முக்கியமானவைகள்/மாசுபடுத்தும் வாயுக்கள் எவை? வினா இலக்கம் 13 இற்கு ஏற்புடையதான தகவல்கள் ,தற்கு உரியதாகும்.
16. வாகனத்தை உரிய வாறு பரீட்சிக்கப்பட்டுள்ளது என்பதை சந்தேகமின்றி அறிந்து கொள்வது எவ்வாறு? வாகனத்தின் புகை வெளியிடல் பரிசோதனையில் முறை இதுவாகும். அது ஒரு மென்பொருள் மூலம் இயக்கப்படுவதால் கோளாறுகள் குறைவதுடன், அது விஞ்ஞான ரீதியாகவும் சாத்தியமாக உள்ளது. எவ்வாறாயினும், வாகன உரிமையாளர்கள் மேலும் அது தொடர்பாக திருப்தியடையவில்லையெனில் அவர்கள் வாகனத்தை மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளலாம். (கோளாறுகள் இருப்பதாக அறிய வருமாயின்) அவ்வாறு இல்லையெனில் Air MAC VET நிலையத்திடம் முறைப்பாடு செய்யலாம். . 17. வாகனத்தை பதிவு செய்திருப்பது அதனை பயன்படுத்கின்ற பிரதேசத்திலும் பார்க்க தொலை தூர பிரதேசமாயின், அதனை பதிவு செய்து புகை பரிசோதனை செய்தல் வேண்டுமா? அவசியமில்லை. இப்பரீட்சை உங்களுக்கு வசதியான, சம்பந்தப்பட்ட கம்பனி இரண்டிற்கு உரிய அங்கீகாரம் பெற்ற பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளலாம். .
18. ஏதேனும் VET நிலையத்தில் மோசடி ஏற்பட்டால் அல்லது அவர்களின் சேவை தொடர்பாக திருப்தியடைய முடியாது விட்டால், யாரிடம் முறைப்பாடு செய்வது. · வாயு வளங்கள் முகாமைத்துவ நிலையம்(Air MAC), சுற்றாடல் அமைச்சு. · மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம். 19. VET நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக முன்மாதிரியாக செயற்படும் அரசாங்க நிறுவனங்கள் எவை? கீழ் வரும் நிறுவனங்கள் இது தொடர்பாக முன்னோடியாக செயற்படுகின்றன. · மோட்டார் வாகன திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர். · வாயு வளங்களின் முகாமைத்துவ நிலையம் (Air MAC) சுற்றாடல் அமைச்சு. · மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) , சுற்றாடல் அமைச்சு · போக்குவரத்து அமைச்சு · போலிஸ் மோட்டார் வாகன திணைக்களம் · நிறைகள் அளவைகள் நியமங்களின் திணைக்களம்
20. என்னிடம் புதிய வாகனமொன்று உரித்தாயின் அதன் காப்புறுதி மூலமாக, வாகன புகை வெளியிடல் பரிசோதனைக்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணம் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியுமா? முடியாது. புகை பரிசோதனையில் தகுதி பெறவில்லையெனில் அதற்காக மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்த்தல்களுக்கான கட்டணங்களை காப்புறுதி மூலமாக பெற்றுக்கொள்ள முடியுமாயினும், பரிசோதனைகளுக்கான கட்டணங்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறாயினும், வாகன காப்புறுதிக்கு ஏற்புடையதான ஆவணங்களை பரிசோதனை செய்தல் அல்லது காப்புறுதி நிறுவத்திடம் அறிவித்தல் என்பவற்றின் மூலம் இது தொடர்பாக சரியான தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இரு தரப்பு உடன்படிக்கை தொடர்பான கேள்வி பட்டியல்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திங்கட்கிழமை, 04 மார்ச் 2013 09:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |