-
- Registration for obtaining Quota to import Hydrochlorofluorocarbon (HCFC) in 2021
- Proposed National Policy on Chemicals Management
- National Green Reporting System (NGRS) of Sri Lanka 2020
- PROJECTS
- NGRS Application
- International Biodiversity Day 2020
- World Earth Day 2020
- Climate Mitigation Action Support Project (CMAS) Procurement Notices
- Methodology for being eligible to import HCFC under quota mechanism
- World Day to Combat Desertification and Drought
- National Policy and Strategies on Traditional Knowledge and Practices related to Biodiversity
-
-
- National Flower of Sri Lanka
- Right to Information Act - Contact details
- Clean Air 2025
- Environment and Social Management Framework-ESMF of GCF funded project on Strengthening Climate Resilience of Subsistence Farmers and Agricultural Plantation Communities residing in the vulnerable river-basins, watershed areas and downstream of the Knuckles Mountain Range Catchment of Sri Lanka
- National Policy on Access to Biological Material and Fair and Equitable Benefit Sharing
- Public Comments - National Policy on Conservation and Sustainable Utilization of Mangrove Ecosystems in Sri Lanka
- e- news paper - Paleo Biodiversirty
- ENVIRONMENTAL AND SOCIAL MANAGEMENT FRAMEWORK FOR THE SRI LANKA INTEGRATED WATER RESOURCES AND WATERSHED MANAGEMENT PROJECT
- Integrated Watershed & Water Resources Management Project - Resettlement Policy Framework
- Environmental and Social Screening Report & Environment and Social Management Plan Mahalindawewa Irrigation Scheme
- ESSR and ESMP for Walawa of Integrated Watershed and Water Resources Management Project
- Special notice to importers, purchasers, owners and service providers of Refrigeration & Air Conditioning Equipment working on R 22 refrigerant
- National Policy on Sustainable Consumption and Production
- National Waste Management Policy
- Green building guidelines
- Sri Lanka Next
- Biosafety News Letter
- News Letter Booklet on Biosafety
- Programme for creation of awareness for the Governemtn Teachers on Environment Education Introduce under the New Syllabus
- Lunch Sheets, Shopping bags, Grocery bags and E.P Lunch boxes are prohibited
- Naagarika Thuru Viyan
- Wana Ropa
- Open Government Data Set
கொள்கைகள் |
தூய்மையான உற்பத்தி கொள்கை -2004
இக் கொள்கையின் நோக்கம் யாதெனில், தூய்மையான உற்பத்தி எண்ணக்கரு மற்றும் அதன் பயன்பாடுகள், நாட்டின் அனைத்து அபிவிருத்தி துறைகளிலும் உள்ளடக்குதலாகும். மேற்படி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார மற்றும் சுற்றுலாத்துறைகளுக்கான இடைக்கால கொள்கைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
தேசிய வாயு தர முகாமைத்துவ கொள்கை -2000
வளி மாசடைதல் காரணமாக ஏற்படும் நோய் நிலைமைகளை குறைத்துக்கொண்டு அதன் மூலம் தேசிய சுகாதாரத்திற்கு செலவிட நேரிடுகின்ற செலவை குறைத்துக்கொள்ளுதல் மற்றும் சிறந்த வளிமண்டலத்தின் தரத்தினை பேணிச்செல்லுதல் இக் கொள்கையின் நோக்கமாகும்.
தேசிய உயிரியல் பாதுகாப்பு கொள்கை -2005
போதுமான அளவில் பாதுகாப்பு முறைமைகளை ஏற்படுத்தி மனித சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக் கூடிய எச்சரிக்கைகளை குறைத்தல் மற்றும் அதன் மூலம் நவீன உயிரியல் தொழில்நுட்பம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய பயன்களை எய்துக்கொள்ள கூடிய வாறு ஒரு சட்டகத்தை உருவாக்குதல் தேசிய உயிரியல் பாதுகாப்பு கொள்கை மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சுற்றாடல் கொள்கை - 2003
சமூக, பொருளாதார அபிவிருத்தி தேவைப்பாடுகள் மற்றும் சுற்றாடல் இணக்கப்பாடு ஆகிய விடயங்களை சமநிலைப்படுத்தி இலங்கையின் சுற்றாடலை மிக நன்றாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஊக்குவித்தல் என்பவற்றை இக்கொள்கையின் மூலம் இலக்காகக்கொள்ளப்படுகிறது.
தேசிய வனவியல் கொள்கை - 1995
தற்போது இலங்கையில் எஞ்சியுள்ள காடுகளை பாதுகாப்பதன் மூலம், உயிரியல் பல்வகைத்தன்மை, மண் மற்றும் நீர் வளங்கள் என்பவற்றை பாதுகாத்து கொள்வதற்கு தேவையான கவனத்தை ஈடுபடுத்தல் இதன் நோக்கமாகும். இக் கொள்கை பிரகாரம், வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள காடுகளை 04 முகாமைத்துவ முறைமைகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளதுடன், அவைகளை பேணுதல், சாறு எடுக்காது பயன்படுத்த முடியுமான, நிலையான முறையில் பலகை உற்பத்தி செய்கின்ற பல் வகை செயற்பாடுகளை நிறைவேற்ற முடியுமான வன முகாமைத்துவம் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் காடுகளின் முகமைத்துவம் என்று தொகுதிபடுத்தப்பட்டுள்ளது.
National Policy on Conservation and Sustainable Utilization of Mangrove Ecosystem in Sri Lanka
யானைகளை பாதுகாத்தல் தொடர்பான தேசிய கொள்கை - 2006
யானைகள் இலங்கையில் வரலாறு, கலாசாரம், சமயம் புராண இலக்கியங்கள் போன்று அரசியலுடனும் தொடர்பை கொண்டுள்ளதுடன், இவைகள் இல்லாத நாட்டை சிந்தித்து பார்க்கவும் இயலாதுள்ளது. ஆகையால் யானைகளுக்கும் – மனிதர்களுக்கும் உள்ள மோதல்களை கட்டுப்படுத்துவதன் மூலம், இலங்கையில் யானைகளின் நீண்டகால நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக இத் தற்காலிக கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மணல், கட்டுமானக் கைத்தொழில் என்பவற்றில் பயன்படுத்துகின்ற வளங்களாக கருதும் தேசிய கொள்கை – 2006
இலங்கையில் சட்டரீதியான, சர்வதேச மற்றும் தேசிய பிணைப்புகள் அதாவது, 1992 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சுரங்க மற்றும் கனிமபொருட்கள் சட்டம், 1980 ஆம் ஆண்டின் தேசிய சுற்றாடல் சட்டம், 1981 ஆம் ஆண்டு கரையோரப்பாதுகாப்பு சட்டம் மற்றும் ஏனைய சட்ட முறைமைகள் , ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றை பிரதிபலிக்கின்றது. அதன் மூலம் அரசு, மக்களுடன் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கால, தற்கால சந்ததிகளுக்கான மனல் வளத்தை வினைத்திறமையாக முகமைத்துவம் செய்வதனை இக் கொள்கை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
தின்ம கழிவுபொருள் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கை
தின்ம கழிவுபொருள் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அதற்காக காட்டப்படுகின்ற பங்களிப்பு குறைவடைந்துள்ளதால் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால், சுற்றாடல் அமைச்சு அவற்றுக்கான தீர்வுகளை கண்டறிவதற்காக தேசிய பிரவேசிப்பின் தேவைப்பாட்டை இனம்கண்டுள்ளது. அதன் பிரகாரம் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில், இணைந்த பொருளாதர மட்டத்தை எதிர்நோக்க கூடிய மற்றும் சுற்றாடல் ரீதியாக சிறந்த தின்ம கழிவுப்பொருள் முறைமையியலை இந் நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டன இக் கொள்கையின் அடிப்படை நோக்கங்கள் யாதெனில், a) அனைத்து கழிவு பொருள்களை பிறப்பிக்கும், கழிவுப்பொருள் முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்குநர்களின் சுற்றாடல் வகைகூறல் மற்றும் சமூக பொறுப்பை உறுதிப்படுத்தல் b) சுற்றாடலுக்கு நன்மை பயக்கின்ற தின்ம கழிவுபொருள் முகாமைத்துவ முறைமைகளை நடைமுப்படுத்துவதற்காக தனி நபர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்கள் இணைந்து முணைப்பாக பங்களிப்பு வழங்குதல். c) கழிவு பொருட்களை அந்தந்த இடங்களில் வெளியேற்றுவதை குறைப்பதற்கு தேவையான வளங்களை ஆகக் கூடிய வாறு பெற்றுக்கொள்ளுதல் d) கழிவுபொருட்களை வெளியேற்றுவதால் ஏற்படுகின்ற ஆபத்தான சுற்றாடல் தாக்கங்களை குறைப்பதன் மூலம் மக்கள் மற்றும் சுற்றாடல் முறைமைகளில் நன்நிலைமையை உறுதிப்படுத்தல். பிளிசரு தேசிய கழிவுபொருள் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது, இத் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகும். அதன் பிரகாரம், மேற்படி கொள்கையின் குறுகிய கால உபாய வழி முறைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மூன்றாண்டு செயற்றிட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கொள்கையின் இணைந்த நடைமுறை பொறி முறைமையை உறுதிப்படுத்துவதற்காக தின்ம கழிவுபொருள் முகாமைத்துவத்திற்கான தேசிய மேடை என்ற அடிப்படை கூறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் யாதெனில், வழிகாட்டல், தேசிய கூட்டிணைப்பு மற்றும் வளங்களை நகர்த்துவதன் மூலம் பொருளாதார மற்றும் கைத்தொழில் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதலாகும்.
ஈரமான நிலங்கள் தொடர்பான தேசிய கொள்கை - 2005
இக் கொள்கை மூலம் தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தேசிய கொள்கைகளுக்கு செல்லுப்படித்தன்மையை வழங்குவதுடன், ஒரு தரப்பாக இலங்கை கையொப்பமிட்டுள்ளதுடன், சர்வதேச சமவாயங்கள், உடன்படிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள் என்பவற்றுக்கு தேசிய மட்டத்தில் அர்ப்ப்ணிப்பு வழங்கப்படுகிறது. |
வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 12:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |