si_uni  ta_uni
SinhalaEnglish

 

இலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்

அறிமுகம்;

­

புகைக் குழாய், புகைபோக்கி அல்லது புகை வௌியேற்றும் வழியுடன் அமைந்த கொள்கலனொன்று இன்றி திறந்த வௌியில் நடத்தப்படுகின்ற அல்லது நடைபெறுகின்ற எந்தவொரு தகனமும் திறந்த தகனமாக பொருள்கோடப்படும். சிகிச்சை நிலைய அல்லது நகரக் கழிவுப் பொருட்கள், நிர்மாணிப்புகளின்போது விரயமாகின்ற பொருட்கள், கமத்தொழில் எச்சங்கள் ஆகிய பொருட்களை திறந்த முற்றத்தில் அல்லது பீப்பாய்களில் கட்டுப்பாடற்ற விதத்தில் தகனம் செய்தலும் இதில் உள்ளடங்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பகுதியளவு (முழுமையற்ற) தகனம் நடைபெறுவதோடு அதன் பெறுபேறாக பாதகமான வழி மாசாக்கல் காரணிகள் (டயொக்சீன், பியுரான் போன்ற), போதியளவு புகை வௌியேற்றும் வழி, குழாய் அல்லது புகைபோக்கியின் ஊடாகச் செல்லாது நேரடியாகவே வளி மண்டலத்தில் கலந்துவிடும்.

பல்சுழற்சி அரோமடிக் ஹைட்ரோகாபன் (Polycyclic Aromatic Hydrocarbons), கன உலோகம் அல்லது டயொக்சீன் போன்ற நுண்ணிய துணிக்கைகளான மாசாக்கல் காரணிகளுக்கும் நுரையீரலின் செயற்பாட்டை பலவீனப்படுத்தல், நரம்பு நோய்கள், புற்றுநோய், இருதய நோய் மற்றும் ஏனைய பரவாத நோய்கள் போன்ற குறிப்பிடத்தக்க கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் தோன்றுவதற்கும் இடையே தொடர்பு காணப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் பிரகாரம் 3.7 மில்லியன் மக்கள் திறந்த வளி மாசடைதல் காரணமாக இறப்புக்கு உள்ளாகின்றனர். இங்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றவர்களில் சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கடுமையான சுவாச நோய் உள்ளவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு பெருமளவில் வளி மாசாக்கல் காரணிகள் ஒன்றுதிரள்கின்ற மூலங்களைக் கவனத்திற்கொள்ளாது வளி மாசாக்கல் மீளளவைகளை தயாரித்தலானது வளி மாசடைவதைக் கட்டுப்படுத்துவதில் அவ்வளவு பயனுள்ளதாக அமையாது. ஆதலால் இலங்கையின் அனைத்து வளி மாசாக்கல் காரணிகள் தொடர்பிலும் திறந்த தகனத்தின் மூலம் நடைபெறுகின்ற பங்களிப்பை இனங்காண்பதற்கான கடும் தேவைப்பாடு தோன்றியுள்ளது. அதேபோன்று திறந்த தகனத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவதற்கு வளி மாசாக்கல் மூலங்கள் மற்றும் அவற்றின் ஒப்பீட்டளவிலான முக்கியத்துவத்தை இனங்காணல் மிக முக்கியமாகும். இதன்படி சுற்றாடல் இராஜாங்க அமைச்சு, மேற்படி ஆலோசனை ஒப்படையின் மூலம் இலங்கையில் நடைபெறுகின்ற திறந்த தகனம் தொடர்பாக அடிப்படை ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. மேற்படி ஒப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபா 150,000.00 ஆகும்.

 

ஒப்படையின் நோக்கம்;

திறந்த தகனத்தின் மூலம் நடைபெறுகின்ற வளி மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக, இலங்கையில் நடைபெறுகின்ற திறந்த தகனம் தொடர்பில் காணப்படுகின்ற அறிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரயோகங்களை இனங்காணல்.

 

காலகட்டம்;

3 மாதங்கள்.

 

ஆலோசகருக்கு இருக்கவேண்டிய ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்;

 

·         வளி வளங்கள் முகாமைத்தும் அல்லது வேறு எந்தவொரு ஏற்புடைய துறையிலும் குறைந்தபட்சம் 10 வருட அனுபவம்.

·         குறைந்தபட்சம் இரசாயவியல், பௌதீகவியல், புள்ளிவிபரவியல் அல்லது வேறு எந்தவொரு ஏற்புடைய துறையிலும் விஞ்ஞானமாணி (MSc.) பட்டத்தைப் பெற்றிருத்தல்.

·         குறைந்தபட்சம் இத்தகைய இரண்டு ஒப்படைகளையாவது பூர்த்திசெய்திருத்தல்.

 

 

விண்ணப்பிக்கும் முறை;

இது தொடர்பில் விருப்பம்காட்டுகின்ற விண்ணப்பதாரர்கள் அல்லது ஆலோசனை அமைப்புகள் (Consultancy organization) இருப்பின், தமது முன்மொழிவுப் பத்திரங்களை, பின்வரும் வெப்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘முன்மொழிவுப் பத்திரத்திற்காக விண்ணப்பித்தல்’ (Request for Proposals) எனப்படும் மாதிரிக்கு அமைய சமர்ப்பித்தல் வேண்டும்.

 

மேற்படி முன்மொழிவுப் பத்திரங்கள், பணிப்பாளர் (வளி வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச தொடர்புகள்), சுற்றாடல் இராஜாங்க அமைச்சு, 980/4/A, விக்கிரமசிங்க பிளேஸ், அத்துல்கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் எனும் மின்னஞ்சலுக்கு 2015 செத்தெம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கச் செய்தல் வேண்டும் என்பதோடு, விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையில் “திறந்த தகனம் தொடர்பில் ஆலோசனைப் பணிகளுக்கான முன்மொழிவுப் பத்திரம்” எனக் குறிப்பிடுதல் வேண்டும்.

 

 

செயலாளர்,

சுற்றாடல் இராஜாங்க அமைச்சு

வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2015 13:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது