small gov

உயிர்பல்வகைமை பிரிவு உயிர்பல்வகைமையைப் பேணிப்பதுகாப்பதற்கு கொள்கை வழிகாட்டலை வழங்குகின்றது. உயிர்பல்வகைமை தொடர்பான தேசிய கொள்கை சட்டகத்தை உருவாக்குவதும் மீளாய்வு செய்வதும் இந்தப் பிரிவின் பிரதான பொறுப்பாகுமகர்.

அதற்கு அமைவாக ஐக்கிய நாடுகளின் அங்கத்தவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட "புவி உச்சி மகாநாடு" 1992ஆம் ஆண்டு பிறேசில் நாட்டின் ரியோ டி ஜெனரோவில் நடைபெற்றது. அதில் உயிர் பல்வகைமையைப் பேணிப்பாதுகாத்தல், அதன் ஆக்கக்கூறுகளை நிலைபேறாகப் பயன்படுத்துதல் மற்றும் மரபணு பயன்பாட்டினால் எழக்கூடிய நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் சர்வதேச உயிர்பல்வகைமை உடன்படிக்கை (CBD) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை இந்த உயிர்பல்வகைமை உடன்படிக்கையில் (CBD 1992ஆம் ஆண்டு யூன் மாதம் கையொப்பமிட்டதுடன் 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் .இந்த உடன்படிகையை உறுதி செய்தது. 1994ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் உயிர்பல்வகைமை உடன்படிக்கையின் பங்காளராக இருப்பதோடு தேசிய அபிவிருத்தி கொள்கையைத் திட்டமிடுகின்றபோது அந்த நடவடிக்கையில் உயிர்பல்வகைமையை உள்வாங்குவதில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது.. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தேசிய மையமாக (NFP) செயற்படுகின்றது. அதேநேரத்தில் அதன் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற உயிர்பல்வகைமை பிரிவு செயற்பாடுகளைச் செயற்படுத்தும் மையமாகத் திகழ்கிறது. உதாரணமாக உடன்படிக்கையின் செயற்பாட்டு மையமாக இருக்கின்றது.

உயிர்பல்வகைமை பிரிவின் பொறுப்புகள்

அமைச்சின் உயிர்பல்வகைமையுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் உயிர்பல்வகைமை பிரிவின் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்றது. நாட்டின் உயிர்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் நிலைபேறாகப் பயன்படுத்துதல் என்பவைபற்றி தீர்மானம் எடுப்பதற்கு உயிரியல் பல்வகைமை பற்றிய தேசிய நிபுணர்கள் குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் குழு தேசிய உயிர்பல்வகைமை மூலோபாயங்களையும் செயற்பாட்டு திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு வழிகாட்டுகிறது. இதை செயற்படுத்தும்போது பெற்ற அனுபவங்களைக் கொண்டு அவற்றைக் காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்வதற்கு உதவுகின்றது.

இதற்கு மேலதிகமாக, தேசிய உயிரினங்களைப் பாதுகாக்கும் குழுமம் (NASCAG), சூழலுக்கு ஒவ்வாத வேற்று இனங்கள் முற்றுகையிடுவதைத் தடுக்கும் குழு, உயிர்பாதுகாப்பு குழு, மகரந்த பரப்பி ஆலோசனைக் குழு, பாரம்பரிய அறிவுபற்றிய நிபுணர்கள் குழு, பழங்காலத்திற்குரிய உயிர்பல்வகைமை ஆலோசனைக் குழு மற்றும் கண்டல் தாவர பாதுகாப்பு நிபுணர்கள் குழு போன்ற தேசிய ஆலோசனைக் குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன.

இந்தக் குழுக்களின் தீர்மானங்கள் உயிர்பல்வகைமை பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு உதவியளிக்கும். பின்வருவன இலங்கையில் உயிர்பல்வகைமையைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பாக இருக்கும் பிரிவுகளாகும்.

  • தேசிய மட்டத்தில் உள்ளக மற்றும் வெளி பாதுகாப்பு நடவடிக்கைகள், கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை இணைப்பாக்கம் செய்தல், செயற்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்.
  • உயிர்பல்வகைமை பற்றிய கூட்டு ஆராய்ச்சி கற்கைககள்
  • உயிர் உடன்படிக்கை இணைப்பாக்கம் (உயிரியல் பல்வகைமைபற்றிய உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சமவாயங்கள் மற்றும் உடன்படிக்கைகள்)
  • உயிர்பல்கைமை பாதுகாப்பு மற்றும் அவற்றின் நிலைபேறான பயன்பாடு என்பவை பற்றி உயிர்பல்வகைமை
  • கல்வி மற்றும் பயிற்சி அளித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • உயிர்பல்கைமையுடன் தொடர்புடைய பாரம்பரிய அறிவையும் கலாசார நடவடிக்கைகளையும் பாதுகாத்தல்
  • இலங்கையில் உயிர்பாதுகாப்பு உடன்படிக்கை, உயிர்பாதுகாப்பு கொள்கை மற்றும் தேசிய உயிர்பாதுகாப்பு சட்டகம் என்பவற்றின் உயிர்பாதுகாப்பு - அமுலாக்கம்
  • மரபணு வளங்களைப் பெறுவதற்கும் அவற்றின் பயன்களை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளுவதற்குமான நகோயா உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
  • மரபணு வளங்களைப் பெறுவதற்கும் அவற்றின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் தேசிய கொள்கையைத் தயாரித்தல்
  • உயிர் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் - தேசிய சட்டம் மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளைச் செயற்படுத்துதல்.
  • விவசாய உயிர்பல்வகைமை, உயிர் பொருளாதாரம், பழங்கால உயிர்பல்வகைமை என்பவற்றுடன் தொடர்புடைய கருத்திட்டங்களயும் நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்படுத்துவதை இணைப்பாக்கம் செய்தல்.
  • சூழலுக்கு ஒவ்வாத வேற்று இனங்கள் முற்றுகையிடுவதைத் தடுப்பதை முகாமைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.
  • கண்டல் தாவரம் மற்றும் ஏனைய நீல கார்பன் இயற்கை முறைமைகளைப் பாதுகாத்தல் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவற்றுடன் தொடர்புடைய பங்கீடுபாட்டாளர்களுடன் இணைப்பாக்கம் செய்தல்.

எமது அணி

Chandani Wilsonஸ்ரீமதி.சாந்தனி வில்சன்
பணிப்பாளர்

ஸ்ரீமதி. ஏ.ஏ.ஆர்.எஸ்.கே. பக்மீதெனிய
உதவிப் பணிப்பாளர்

ஸ்ரீமதி. ஆர்.எம்.என்.பி. ரணசிங்க
உதவிப் பணிப்பாளர்

wpsd pathiranaதிருமதி. டபிள்யு.பி. எஸ்.டீ. பதிரன
உதவிப் பணிப்பாளர்