small gov

அமைச்சு வளாகத்தில் ஏனைய பணியாட் தொகுதியினருடன் சேர்த்து பொதுமக்களுக்கும் அமைதியான பயனுறுதிமிக்க வேலை செய்யும் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் முக்கியமான வகிபாகத்தை நிறைவேற்றும் பொறுப்பு நிர்வாக பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரிவுகளுக்கு இடையில் வினைத்திறன் மிக்க இணைப்பாக்கத்தை மேம்படுத்துதல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் வளாகத்தின் சிறப்பான பராமரிப்பு என்பவற்றிற்கான பொறுப்பு இந்தப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிர்வாக பிரிவு செயலாளரின் தலைமையில் மற்றும் சிரேஷ;ட அலுவலரான சிறந்த அனுபவம் கொண்ட மேலதிக செயலாளர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் இந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் செயற்படுகிறது.

நோக்கம்

  • அமைச்சின் தரத்தை உயர்த்துவதற்கு உதவுகின்ற பௌதிக சூழலை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்
  • உயர் திறன் மற்றும் தரங்களைக் கொண்ட பணியாட் தொகுதியினருடன் பராமரித்தல்
  • ஏனைய நிறுவகங்களுடன் பயனுறுதிமிக்க இணைப்பாக்கத்தை ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்தல்
  • பாவணையாளர் சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வினைத்திறன் மிக்க வகையிலும் பயனுறுதி மிக்க வகையிலும் ஏற்பாடுசெய்தல் மற்றும் பராமரித்தல்
  • பணியாட் தொகுதியினரின் நலனோம்பல் வசதிகளை உயர்த்துதல் மற்றும் அமைச்சின் மொத்த நிர்வாகம், வழிகாட்டல் மற்றும் மதிப்பீடு என்பவற்றை மேம்படுத்துதல்

செயற்பாடுகள்

  • பணியாட் தொகுதியினரின் நியமனங்கள், இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து ஸ்தாபன நடவடிக்கைகள்
  • ஆளணி தேவைகளை மதிப்பீடு செய்தல், புதிய பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஆளணி விபரங்களை இற்றைப்படுத்துதல்
  • வாகன பதிவு, வாகனங்களை ஒதுக்குதல், காப்புறுதி, வாகன பராமரிப்பு உள்ளிட்ட அமைச்சில் உள்ள அனைத்து வாகனங்களின் முகாமைத்துவ நடவடிக்கைகள்
  • அமைச்சரவை பத்திரங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், ஆண்டறிக்கைகள், பாராளுமன்ற வினாக்கள், பாராளுமன்ற ஆலோசனைக் குழு, பொது மனுக்கள் குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு
  • அமைச்சின் விடயப்பரப்புக்கு கீழ் வரும் நிறுவகங்களுக்காக பணிப்பாளர் சபையையும் தலைவரையும் நியமிப்பது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்
  • அமைச்சரின் தற்காலிக பணியாட் தொகுதியினரை நியமிப்பது சம்பந்தமான நடவடிக்கைகள்
  • தபால் பராமரிப்பு
  • பதிவு கூட நடவடிக்கைகளைப் பராமரித்தல்
  • தகவலறியும் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்
  • நிலைபேறான சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் மாதாந்த பணியாளர் கூட்டங்கள் என்பவற்றை நடத்துவதற்காக அமைச்சுக்கு இடையில் குழுவை நடத்துவதற்கு வசதிப்படுத்துதல்
  • கேள்விப்பத்திரங்கள் பாவணையாளர் சேவைகளின் (பாதுகாப்பு மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகள்) ஒதுக்கங்களுக்காக உடன்படிக்கைகள் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் பயன்பாட்டு சேவைகளை பராமரித்தல்.
  • அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற ஏனைய நிறுவகங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இணைப்பாக்கம் செய்தல்
  • பிரதேச செயலள மட்டத்தில் வேலை செய்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு (சுற்றாடல்) வழிகாட்டுதல், இணைப்பாக்கம் செய்தல் மற்றும் அவர்களின் பணிகளைக் கண்காணித்தல்

எமது அணி

SAS Manthrirathnaதிரு. எம்.ஏ.ஐ.கே.மந்திரரத்ன
சிரேஷ்ட உதவிச் செயலாளர்

Ms Ashaniதிருமதி. எம்.எல்.எஸ். அஷானி
உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
Mr. Thushara
திரு. ஜனக துஷார பாலசூரிய
உதவிச் செயலாளர் (நிர்வாகம்)



AOஸ்ரீமதி. எம்.எஸ்.எம் பெர்னாண்டோ 
நிர்வாக அதிகாரி