காற்று வளங்கள் முகாமைத்துவம்
காற்று வளங்கள் முகாமைத்துவ பிரிவு காற்று தர முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கீடுகாட்டாளர்களுடன் கூட்டிணைந்து தேசி காற்று தர முகாமைத்துவ கொள்கைகளையும் ஒழுங்குவிதிகளையும் அமுலாக்கும் இணைப்பாக்க நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தப் பொறிமுறையின் கீழ், வாகனங்களின் புகை வெளியேற்ற பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தைக் கண்காணித்தல், அசையா மூலங்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், உள்ளக காற்று தர முகாமைத்துவத்துடன் சம்பந்தப்;பட்ட நடவடிக்கைகள், எரிபொருள் தரங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள், சுற்றியுள்ள காற்றின் தரத்தைக் கண்காணித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பவை மேற்கொள்ளப்படுகின்றன.
செயற்பாடுகள்
- காற்று தர முகாமைத்துவத்தை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் மூலோபாய முகாமைத்துவத்திற்கான நிறுவனரீதியான சட்டகம்.
- அசையாமூலங்களிலிருந்து காற்று வெளியேற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் முகாமைப்படுத்துவதற்கு கொள்கைகளைத் தயாரித்தல்.
- உள்ளக காற்று தர முகாமைத்துவம் தொடர்பான கொள்கைகளைத் தயாரித்தல்.
- வளி மாசடைவதற்குப் பங்களிப்புச் செய்கின்ற நெறிமுறையற்ற மற்றும் கவனமற்ற செயற்பாடுகளை முகாமைப்படுத்துதல்.
- தூய்மை தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் நடவடிக்கைமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
- காற்று தரத்தை கண்காணிப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்குதல்.
- காற்று தரத்தை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வூட்டல், கல்வி, தகவல் மற்றும் அறிவு என்பவற்றை முகாமைப்படுத்துவதற்கான மூலோபாயங்களை விருத்தி செய்தல்.
- வளி மாசடைதலில் ஆராய்ச்சி, அபிவிருத்தி என்பவற்றைப் பேணுதல் மற்றும் அழுத்தங்களை மதிப்பீடு செய்தல்.
- வினைத்திறன் மிக்க காற்று தர முகாமைத்துவத்திற்காக மனித வளங்களையும் தகவல் அறிவையும் அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி.
- காற்று தர முகாமைத்துவத்திற்காக உலக பங்கேற்பும் கூட்டொருமைப்பாடும்.
- காற்று தர முகாமைத்துவத்திற்காக நிலைபேறான நிதியிடல் பொறிமுறையை உறுதிப்படுத்துதல்.
தேசிய ஓசோன் அலகு
இலங்கை அரசாங்கம் (GOSL) 1989ஆம் ஆண்டு வியன்னா உடன்படிக்கை (VC) மற்றும் மொன்ட்ரீல் றெநிமுறை என்பவற்றை ஏற்றுக் கொண்டு அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சுற்றறாடல் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் கீழ் தேசிய ஓசோன் அலகை ஸ்தாபித்தது. அன்றிலிருந்து தேசிய ஓசோன் அலகு சுற்றாடல் விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் இயங்குகின்றது.
சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள தேசிய ஓசோன் அலகு வியன்னா உடன்படிக்கை மற்றும் அதன் மொன்ட்ரீல் நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு ஓசோன் படலத்தை சேதப்படுத்தும் பொருட்கள் பற்றி மைப்படுத்தப்பட்ட நோக்கத்திற்கு சேவையாற்றுகின்றது. மேலதிக விபரங்களுக்கு கிளிக் செய்யவும் www.nou.lk
எமது அணி
![]() பணிப்பாளர் (ARM & NOU) |
![]() பிரதி பணிப்பாளர் |
![]() உதவிப் பணிப்பாளர் |
![]() திரு. ஆர்.எஸ்.எஸ். ரத்நாயக்க
உதவிப் பணிப்பாளர்
|