எமது கம்பெனி 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கம்பெனிகள் பதிவாளரால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களைக் கொண்ட கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டது. எமது கம்பெனி புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் துணைக் கம்பெனியாகும். இந்தக் கம்பெனியின் ஏனைய பங்குதாரர்களாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை பொசுப்பேற் கம்பெனி என்பவை இருக்கின்றன.
GSMB தொழில்நுட்ப சேவைகள் கம்பெனி இலங்கையில் தொழில்நுட்ப அறிவு, மனித வளங்கள் மற்றும் பகுப்பாய்வு ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டுள்ள ஒரே தனியார் கம்பெனியாகும். இது கனிய வளங்களை மதிப்பீடு செய்வதற்கு புவிச்சரிதவியல் பொறியியலுக்காக பல்வேறு வகயில் இயங்குகின்ற கருத்திட்டங்களைப் பொறுப்பேற்றுள்ளது. இந்தக் கம்பெனியின் செயற்பணி கனியவள தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த செயலாற்றுகையை வழங்குவதோடு இலங்கையில் சூழல் முகாமைத்துவத்திற்கும் கனியவள அபிவிருத்திக்கும் மிகப் பெரிய வர்த்தக வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
நோக்கு
இந்தக் கைத்தொழிலில் பொறுப்புள்ள செயற்பாடுகளை சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உறுதிப்படுத்தி இலங்கையில் வர்த்தக ரீதியாக சுரங்கங்கள் அகழ்தலிலும் கனிப்பொருட்களிலும் சந்தையில் தலைவராக இருத்தல்.
செயற்பணி
இலங்கை அரசாங்கத்திற்காக உள்ளூர் ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் திறமையைக் கட்டியெழுப்புவதன் ஊடாக உற்பத்தி திறனையும் தரத்தையும் மேம்படுத்துவதன் மூலம் தேசிய பெறுமதியை அதிகரிக்கின்ற அதேவேளையில் சுரங்க அகழ்வு மற்றும் வியாபாரம் செய்தலின் சமூக கிரயத்தை வினைத்திறன் மிக்க வகையில் முகாமைப்படுத்துகிற மற்றும் குறைக்கிற விம்பத்தக்க அகழ்வு பங்காளராக இருத்தல்.
தொடர்பு விபரங்கள்
- வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பெனி,
இல. 190/A, ரத்னவீர கட்டிடம்,
ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை,
நுகேகொடை. - www.gsmbts.gov.lk