தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களமானது, தாவரவியல் நடவடிக்கைகள் தொடர்பிலான இலங்கையின் முன்னோடி நிறுவனமாகும். தாவர வெளிவாரிப் பேணுகை, தாவரங்களை இனங்காணல் மற்றும் அவை குறித்த கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளல் இலங்கையில் அலங்காரப் பூங்காவியலை ஊக்குவிப்பதற்கான ஆய்வு ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பூச்செடியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு பெரும் பங்களிப்பினைச் செய்வதோடு, வருடாந்தம் பூங்காக்களை பார்வையிட வருகைதரும் சுமார் 2.5 மில்லிய் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் திகழ்கிறது.
பிரித்தானியர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரதான பூங்காக்களான பேராதனை அரச தாவரவியல் பூங்கா (1821), ஹக்கல தாவரவியல் பூங்கா (1861), கம்பஹா, ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா (1876) மற்றும் கனேவத்த மூலிகைத் தாவரப் பூங்கா (1950) ஆகியவற்றோடு முறையே 2013, 2015 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில உலர் வலய தாவரவியல் பூங்கா மற்றும் அவிசாவலை சீதாவக ஈர வலய தாவரவியல் பூங்கா என்பன தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுவதுடன், இலங்கையின் தாவரவியல் பூங்காக்கள் 14 ஆம் நூற்றாண்டு வரை நீண்டு செல்லும் பண்டைய மன்னர்களின் சகாப்தத்திற்குச் சொந்தமான நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாற்றையும் கொண்டுள்ளன.
Contact Details
- +94 812 388 238
- +94 011 – 2866633
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- www.botanicgardens.gov.lk