ஜேர்மன் நேஷனல் ஜான் ஹார்ஜன்பெக் அவர்களால் 1905 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதிக்கு முன்பு, காட்டு யானைகளை தடுத்து வைத்திருக்கும் இடமாக 5 ஏக்கர் நிலப்பகுதியில் தெஹிவலை மிருக்கட்சிசாலை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1926 இல் இது “இலங்கை மிருக்காட்சிசலை நிறுவனம்” எனப் பெயரிடப்பட்ட அதே வேளை, 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் தேதி இந்த நிறுவனம் அரசாங்க மயப்படுத்தப்பட்டு 1962 ஆம் ஆண்டில் “தேசிய மிருகக்காட்சிசலை திணைக்களம்” என பிரகடனப்படுத்தப்பட்டது. இதன்படி, தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை சபாரி பூங்கா ஆகிய பிரதான செயற்பாட்டு பிரிவுகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவருவதுடன், அவற்றின் ஊடாக விலங்குகளின் நடத்தை மற்றும் வாழ்விடப் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் திணைக்களத்தின் நோக்கங்களை அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Contact Details
- +94 112 712 751-3
- +94 0112 734 542
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.