small gov

தேசிய சுற்றாடல் கொள்கைகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றை உருவாக்குவதில் சுற்றாடல் அமைச்சு பிரதான பங்ககு வகிக்கிறது. அதற்கு அமைவாக, இந்த அமைச்சு அரசாங்க துறை, தனியார் துறை சூழலியல் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அரசா சார்பற்ற அமைப்புகள் என்பவை உள்ளிட்ட தகுந்த பங்கீடுபாட்டாளர்கள் ஆகிய அனைவருடனும் கூட்டிணைந்து தேவையான கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளுகிறது.

அரசாங்கத்தின் கொள்கை சூழலுடன் சம்பந்தப்பட்ட விடயத்துடன் தொடர்புடைய இலக்குகளை அமைத்துள்ளது. சூழலியல் அபிருத்தி மற்றும் முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்போது அத்தகைய இலக்குகளுக்குத் தேவைப்படுகின்ற திட்டங்களை அமுலாக்குவதில், மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம், தகுந்த வரிசை அமைச்சுகள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் மற்றும் இந்த நடவடிக்கைமுறையில் உள்ள பிரதான பங்காளர்கள் ஆகியோருடன் நெருங்கிய கூட்டிணைவும் வலுவான கூட்டுறவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர் பல்வகைமையைப் பாதுகாத்தல், வன உள்ளடக்கத்தை அதிகரித்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதகமான தாக்கத்தைக் குறைத்தல், கனிய வளங்களின் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான நுகர்வு எண்ணக்கருவை அறிமுகப்படுத்துதல் என்பவை இதனோடு சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைவதற்கான திட்டங்களின் மற்றும் செயற்பாடுகளின் வெற்றிக்காகத் தேவைப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையில் இருக்கின்றன. இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்மாண துறை ஆகியவற்றிற்கு புதிய பரிமாணத்தை அளித்து, சூழல் நேயம் கொண்ட நிர்மாண செயல்முறைகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மேலும் வனப் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு, கழிவுப் பொருள் முகாமைத்துவம், சக்தி முகாமைத்துவம் மற்றும் ஒலி முகாமைத்துவம் போன்ற சூழலியல் பொறுப்புகள் தொடர்பாக பிரசைகளின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இந்த அமைச்சு உயர் திறமை மிக்க மனித வளங்களைக் கொண்டுள்ளது என்பதையும் அது இந்த அமைச்சின் நிகழ்ச்சித்திட்டங்களையும் கொள்கைகளையும் பயனுறுதி மிக்க வகையில் அமுல்படுத்துவதில் பிரதான ஆக்கக்கூறை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.