small gov

கடமைகளும் செயற்பாடுகளும்

  • பிழைகளையும் மோசடிகளையும் தடுப்பதற்காக திணைக்களங்களில் கட்டுப்பாட்டு முறைமை செயற்பாட்டையும் உள்ளக தேடலையும் உறுதிப்படுத்துவதாகும். அத்துடன் சரியான செயற்பாடுகளுடன் சேர்த்து நியதிகளையும் வெற்றிகரமாக வடிவமைக்கிறது.
  • சரியான நிதி கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற தகவல்களை வழங்கி கணக்கீட்டு செயற்பாடுகளைப் பரீட்சித்தல் மற்றும் கணக்குகள் மற்றும் ஏனைய அறிக்கைகள் என்பவற்றின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துதல்.
  • பணியாட் தொகுதியினருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்களின் செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
  • அமைச்சின் சொத்துக்கள் அனைத்துவிதமான சேதங்களிலிருந்து எந்தளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பதை புலனாய்வு செய்தல்.
  • பொது நிருவாகத்திற்குப் பொறுப்பான அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றின் மூலம் வெளியிடப்படுகின்ற அரசாங்க ஸ்தாபனக் கோவை மற்றும் ஏனைய குறைநிரைப்பு அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை புலனாய்வு செய்தல்.
  • விரயங்களைத் தடுப்பதற்கும் அவற்றைக் கண்டறிவதற்கும், கொள்ளவு குறைவாக இருத்தல் மற்றும் அதிக செலவு என்பவற்றைக் கண்டறிவதற்கும் தெரிவு செய்யப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் வெற்றியைப் பரிசோதித்தல்.
  • அமைச்சின் கணக்கீட்டு நடைமுறையைப் பரிசோதித்தல் மற்றும் அந்த செயற்பாடுகள் எதேனும் செலவுகளுக்கு இட்டுச் செல்கின்றதா என்பதையும் சொத்துக்கள் மற்றும் அமைச்சின் சொத்துக்கள் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் பரிசோதித்தல்.
  • தேவைப்படும்போது விசேட புலனாய்வுகளை நடத்துதல்.

எமது அணி

D.A.I.Pereraதிருமதி. டி.ஏ.ஐ. பெரேரா
பிரதம உள்ளக கணக்காய்வாளர்