small gov

உயிரியல் பல்வகைமை மீதான உடன்படிக்கை (CBD)

உயிரியல் பல்வகைமை மீதான உடன்படிக்கை 1992ஆம் ஆண்டு யூன் மாதம் ரியோ டி ஜெனரோவில் நடைபெற்ற சூழல் மற்றும் அபிவருத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (UNCED) கையெழுத்துக்காகத் திறக்கப்பட்டது. அது 1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செயற்படத் தொடங்கியது. தற்போது அதில் 196 நாடுகள் அங்கம்; வகிக்கின்றன. உயிரில் பல்வகைமை பற்றிய சமவாயத்தின் பிரதான நோக்கம் உயிரியல் பல்வகைமை, உயிரியல் பல்வகைமையை நிலைபேறாகப் பயன்படுத்துதல் மற்றும் அதைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கின் நன்மைகளை சமமாகவும் நியாயமாகவும் பகிர்ந்து கொள்ளுதல் என்பவையாகும். உயிரியல் பல்வகைமையைப் பேணிப்பாதுகாப்பதற்கு இந்தப் பல்வகைமையை நிலைபேறாகப் பயன்படுத்துதல் முக்கியம் என்பதை இந்த சமவாயம் அடையாளம் கண்டுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1992ஆம் ஆண்டு யூன் மாதம் கைசாத்திட்டு 1994 மார்ச் மாதம் உறுதிப்படுத்தியது. இந்த அமைச்சு சூழல் சம்பந்தப்பட்ட சமவாயத்தில் தேசிய மையமாகச் செயற்படுகின்ற அதேவேளையில் அதன் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற உயிர்பல்வகைமை பிரிவு அதை செயற்படுத்தும் நிலையமாகச் செயற்படுகின்றது.

உயிர்பாதுகாப்பு பற்றிய கார்ட்டஜினா உடன்படிக்கை

உயிரியல் பல்வகைமை பற்றிய உடன்படிக்கைக்கு உயிர்பாதுகாப்பு பற்றிய கார்ட்டஜினா உடன்படிக்கை, குறிப்பாக எல்லலைகளுக்கு இடையிலான நகர்வுகளுக்கு கவனம் செலுத்தி மனித சுகாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கவனத்திற் கொண்டு நவீன உயிர் தொழில்நுட்பத்தினால் உயிர்பல்வகைமைக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களின் விளைவாக திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்களின் வாழ்க்கை பயன்பாட்டையும் போக்குவரத்தையும் (LMOs) கையாள்வதை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச உடன்படிக்கையாக இருக்கின்றது. இது 2000ஆம் ஆண்டு சனவரி 29ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டு 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி செயற்படத் தொடங்கியது. இலங்கை 2000ஆம் ஆண்டு உயிர்பாதுகாப்பு தொடர்பான கார்ட்டஜினா உடன்படிக்கையில் கைசாத்திட்டு 2004ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியது.

சூழல் சம்பந்தப்பட்ட இந்த அமைச்சு இந்த உடன்படிக்கையின் தேசிய மையமாகச் செயற்படுகின்ற அதேவேளையில் அதன் விடயப்பரப்பின் கீழ் வருகின்ற உயிர்பல்வகைமை செயலகம் அதை செயற்படுத்தும் நிலையமாகச் செயற்படுகின்றது.

இந்த நாட்டில் உயிர்தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும் இலங்கை அரசாங்கம் உயிரினங்களின் வாழ்க்கை பயன்பாடு (LMOs) மரபணு ரீதியாக திருத்தியமைக்கப்பட்ட உயிரினங்கள் (GMOs) மற்றும் உணவு ஊட்டல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உற்பத்திகள் (FFP) என்பவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றின் ஒழுங்குவிதிகளை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை அடையாளம் கண்டு, உயிர்பல்வகைமை செயலகம் 2005ஆம் ஆண்டு தேசிய உயிர்பாதுகாப்பு சட்டக அபிவிருத்தி கருத்திட்டத்தை செயற்படுத்தியது. இது 2005ஆம் ஆண்டில் தேசிய உயரிர்பாதுகாப்பு சட்டகத்தை (NBF) உருவாக்குவதற்கு வழியமைத்தது.