small gov

அனைத்து நாடுகளும் ஆதிகாலத்திலிருந்து தூதுவர் முகவர் நிலையங்களின் நிலையை அடையாளம் கண்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் இந்த உரிமை ஆவணத்தின் கொள்கைகளும் நோக்கமும், நாடுகளின் இறைமையின் சமநிலைகள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் சமாதானம் என்பவற்றைப் பேணுதல் மற்றும் நாடுகளுக்கு இடையில் சிநேகபூர்மான உறவுகளை ஊக்குவித்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.

நாடுகளுக்கு இடையில் வழமையான தூதரக தொடர்புகளை இந்த தூதரக நல்லுறவு குறிக்கிறது. அது இறைமையுள்ள நாடுகளுக்கு இடையில் தொடர்பு மற்றும் தொடர்பாடல் என்பவற்றில் அது ஈடுபடுகிறது. இது சுதந்திரமான நாடுகளுக்கு இடையில் தூதரக நல்லுறவுக்கான சட்டகத்தை வரைவிலக்கணப்படுத்துகின்ற ஒரு சர்வதேச உடன்படிக்கையாகும். இது 1961ஆம் ஆண்டின் தூதரக நல்லுறவுகள் பற்றிய வியன்னா உடன்படிக்கையில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இது தூதர்கள் அவர்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு தூதரங்களின் சிறப்புரிமைகளைக் குறித்துரைக்கிறது.

சர்வதேச உறவுகள் முக்கியமானதாகும் ஏனனில் அவை நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகளையும் எதிர்கால பிணக்குகளையும் தடுப்பதற்கு உதவுகிறது. அவை நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தையும் பொது இலக்குகளையும் பலப்படுத்துகிறது. அத்துடன் உடன்படிக்கைகளுடன் கட்டுப்பட்டிருப்பதற்கு பெரும் ஆணிவேராகத் திகழ்கிறது. நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை அடைவதற்கு சர்வதேச உறவுகள் பிரதான வகிபாகத்தை வகிக்கின்றது.

பிரதான செயற்பாடுகள்

  • சமவாயங்கள், உடன்படிக்கைகள், பிரகடனங்கள், கூட்டுத்தாபன நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றுடன் இணைப்பாக்கம் செய்து கொண்டு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் மிக்க அமுலாக்கத்திற்கு பங்களிப்புச் செய்தல். அமைச்சு இதில் தேசிய மைய நிலையமாக செயற்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்டம் (UNEP), உலக சூழல் வசதி (GEF), தெற்காசிய கூட்டுறவு சூழல் நிழ்ச்சித்திட்டம் (SACEP), உலக மாற்ற ஆராய்ச்சிக்கான ஆசிய பசிபிக் வலையமைப்பு (APN) மற்றும் சர்வதேச நைதரசன் முகாமைத்துவ முறைமை (INMS) என்பவை இலங்கைக்கான செயற்பாட்டு மையமாக இருக்கின்றன.
  • இலங்கையின் சார்பில் சர்வதேச சூழல் சமவாயங்கள் மற்றும் உடன்படிக்கைகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டுறவு நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிற்கு வருடாந்த நாட்டு பங்களிப்புகள் மற்றும் அனுசரணை வசதிகள் என்பவற்றிற்கு கொடுப்பனவுகளை தாமதமின்றி வசதிப்படுத்துதல்.
  • தெற்காசிய கூட்டுறவு சூழல் நிழ்ச்சித்திட்டத்திற்கு (SACEP) அதன் அனுசரணை நாடு என்ற வகையில் வசதிப்படுத்துதல், அதன் ஆலோசனை குழு கூட்டங்களில், ஆளுகை பேரவை என்பவற்றில் கலந்து கொள்ளுதல் மற்றும் தெற்காசிய கூட்டுறவு சூழல் நிழ்ச்சித்திட்டத்தினால் (SACEP) ஒழுங்கு செய்யப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களை இணைப்பாக்கம் செய்தல்.
  • உலக சூழல் வசதி (GEF), பசுமை காலநிலை நிதியம் (GCF), உலக பசுமை வளர்ச்சி நிறவகம் (GGGI), வனப் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையம் (ICRAF) என்பவற்றினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற சூழல் கருத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்களிந்து ஆகக் கூடிய பயன்களைப் பெற்றுக் கொள்ளுதல்.
  • உலக சூழல் வசதியினால் (GEF) இலங்கை அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட மானியங்களுடன் தொடர்புடைய அனைத்து கருத்திட்டங்களையும் மதிப்பீடு செய்யக்கூடியதாக இருப்பதோடு, பரிந்துரைகளைச் செய்வதோடு தேவையான தொடர் செயலிகளையும் மேற்கொள்ளுகின்றது. அத்துடன் கருத்திட்டங்களை வினைத்திறன் மிக்க வகையில் செயற்படுத்துவதற்குத் தலையீடு செய்வதோடு கருத்திட்டத்துடன் தொடர்புடைய தேசிய நிலைக்குழு கூட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • உலக சூழல் வசதியின் (GEF) கீழ் சிறு மானிய நிகழ்ச்சித்திட்;டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் கருத்திட்டங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் நெறிப்படுத்துதல்.
  • ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் (UNEP) அங்கத்துவ நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட சூழல் துறையில் பல்தரப்பு பிரகடனங்கள் மற்றும் முன்மொழிவுகள் என்பவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய தகுந்த பங்கீடுபாடடளர்களுடன் இணைந்து இலங்கையின் சார்பாக அவதானிப்புகளையும பரிநிதுரைகளையும் மேற்கொள்ளுதல்.
  • சூழல் துறையில் இலங்கை கையொப்பமிட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை ஆராய்ந்து தகுந்த முன்மொழிவுகளையும் அவதானிப்புகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி உடன்படிக்கைகளுக்கான இசைவைப் பெறுவதற்காகச் சமர்ப்பித்தல்.

இந்தப் பிரிவுடன் தொடர்புடைய சுற்றறிக்கைகள்

எமது அணி

kulani
திருமதி. குலானி எச்.டபிள்யு. கருணாரத்ன
பணிப்பாளர்

b dummy
பிரதிப் பணிப்பாளர்
 
 
 
 

சர்வதேச உறவுகள்