இலங்கையிலுள்ள கைத்தொழில், தொழிற் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பாட நெறிகளை கற்கின்ற குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் வளிப் பதனாக்கித் துறையின் மாணவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் மற்றும் கருவிகளை கையளிப்பதுடன் தொடர்புடையதாக, சுற்றாடல் அமைச்சில் 2025 ஜூன் மாதம் 11 ஆந் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாடிடப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் சுற்றாடல் அமைச்சுக்கும், மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற் கல்வி ஆணைக் குழு (), தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA), தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (NYSC) மற்றும் இலங்கை தொழிற் பயிற்சி ஆணையகம் (VTA) ஆகியவற்றுக்கிடையே கைச்சாடிடப்பட்டன.
மொன்ரியல் கூட்டிணைப்பின் ஒழுங்கு விதிகளை இலங்கையில் செயற்படுத்தும் வழி முறையின் கீழ் சுற்றாடல் அமைச்சின் வாயு வளங்கள் முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகினால் பல்வேறு செயற்பாடுகள் / நிகழ்ச்சிகள் செயற்படுத்தப்படுவதுடன், இவ் ஒப்பந்தத்தின் கீழ், நவீன குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் வளிப் பதனாக்கி பயிற்றுவிப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் போன்றன தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில், தொழிற் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கையளிக்கப்படுகின்றன. இதன் கீழ் கிட்டத்தட்ட ரூபா 42 மில்லியன் பெறுமதியான பயிற்சி உபகரணங்கள் மற்றும் கருவிகள் கையளிக்கப்படவுள்ளன.
இதன் பிரதான நோக்கம், இலங்கையின் கைத்தொழில், தொழிற் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்ற குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் வளிப் பதனாக்கித் துறையின் மாணவர்களுக்கு நன்னெறி மிக்க சேவை நடத்தைகள் தொடர்பாகவும், நவீன தொழில்நுட்பம் தொடர்பாகவும் அறிவுத் திறனை கையளிக்கும் பொருட்டு கைத்தொழில், தொழிற் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களினது பயிற்றுவிப்பு வசதிகளை அதிகரிப்பதாக காணப்படுகின்றது. நடத்தைகள் தொடர்பாகவும், மொன்ரியல் கூட்டிணைப்பின் ஏற்பாடுகளை இலங்கையில் செயற்படுத்துவதற்கு ஏற்புடையதாக குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் வளிப் பதனாக்கித் துறையின் முழு மொத்த தராதர நிலையை மேலுயர்த்துவதற்கும், அதனை பேணுவதற்குமான திறன் கிடைப்பதுடன், திறமை மிக்க ஆளணியொன்றை உருவாக்குவதற்கும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.