நீல வானுக்கான தூய்மையான காற்றின் முதலாவது சர்வதேச தினம் 2020
காற்று வளங்கள் முகாமைத்துவ பிரிவு 2020 செப்டம்பர் 20ஆம் திகதி அமைச்சு செயலாளரின் ஆதரவில்; 'நீல வானுக்கான தூய்மையான காற்றின் முதலாவது சர்வதேச தினத்தைக்' குறிக்குமுகமாக ஒரு ஞாபகார்த்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. இதன் பிரதான நோக்கம், விழிப்புணர்வை உயர்த்துவதாகும். சுகாதார அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, மொறட்டுவ பல்கலைக்கழகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு என்பவை இந்த நிகழ்வின் வளப்பகிர்வாளர்களாக சேவை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட செயலமர்வாகவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனோடு இணைந்ததாக வளி மாசடைவதைக் குறைக்கும் விடயத்தில் தமது ஈடுபாட்டைக் காட்டுகின்ற தனியார் துறையின் உதவியுடன் டெய்லி மிரர் பத்திரிகையில் "காற்று தர முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்" பற்றி சிறப்பு இதழ் ஒன்றை வெளியிடுவதன் ஊடாக பொது மக்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் பொது மக்களுக்கு அறிவூட்டப்பட்டது
காற்று தர முகாமைத்துவம் தொடர்பான தேசிய கருத்தரங்கு
இலங்கையில் காற்று தர முகாமைத்துவம் தொடர்பான தேசிய கருத்தரங்கு 2018, இந்த அமைச்சின் மூலம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16, 17 ஆகிய திகதிகளில் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் உதவியின்/தலைமையின் கீழ் நடத்தப்பட்டது. வளி மாசடைதல் மற்றும் காற்று வளங்களை முகாமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் இணைந்த அண்மைக்கால தொழில்நுட்பம், விஞ்ஞான மற்றும் கொள்கை அபிவிருத்தி என்பவை இங்கு கலந்துரையாடப்பட்டன.
நாங்கள் சுவாசிக்கும் காற்று - 2016
"நாங்கள் சுவாசிக்கும் காற்று - 2016" ஆறாவது கருத்தரங்கு இலங்கை சனாதிபதி மாண்பு மிகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆதரவில் பத்தரமுல்லஈ வாட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் 2016 மே 5, 6 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அது காற்று வள முகாமைத்துவத்தில் மற்றும் திட்டமிடல், செயற்படுத்துதல் மற்றும் வளி மாசடையும் பிரச்சினைகளின் பொருளாதார பகுப்பாய்வு ஆகிய விடயங்களில் அடையாளம் காண்பதிலும் நல்ல செயற்பாடுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது. ஆரம்ப அமர்வில் தூய காற்று 2025 செயற்பாட்டுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது