நடந்துகொண்டிருக்கும் கருத்திட்டங்கள்
இலங்கையில் நிலைபேறான மற்றும் வினைத்திறன்மிக்க மின் நகர்வு முறைமை (GEF கருத்திட்டம்)
இலங்கையில் நிலைபேறான மற்றும் வினைத்திறன்மிக்க மின் நகர்வு முறைமை (GEF கருத்திட்டம்) இந்தக் கருத்திட்டம் உலக சூழல் வசதிகளின் கீழ் (GEF) அமுல்படுத்தப்படுகின்றது. மானியங்களைத் தயாரித்தல் மற்றும் மின்-நகர்வுக்கு நிலைமாறுவதற்கு உலக நாடுகளுக்கு உதவுவது இதன் துணைக் கருத்திட்டமாக இருக்கின்றது. ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் வளி தரம் மற்றும் நகர்வு அலகு உலக கருத்திட்டத்தின் செயற்படுத்தும் முகவர் நிலையமாக இருக்கின்றது. இலங்கையில் இந்தக் கருத்திட்டத்தை செயற்படுத்தும் முகவர் நிலையமாக சுற்றாடல் அமைச்சு திகழ்கிறது.
இந்தக் கருத்திட்டத்தின் நோக்கம் "இலங்கையில் நிலைபேறான மற்றும் வினைத்திறன் மிக்க மின் நகர்வு முறைமை" என்ற இந்தக் கருத்திட்ட எண்ணக்கருவை முழுமையான கருத்திட்டத்திற்குள் விருத்தி செய்வதாகும்.